சுவீடன் பிரதமரின் கொலை விசாரணை கைவிடப்பட்டது

பிரதான சந்தேக நபர் மரணம்:

34 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட சுவீடன் பிரதமர் ஒலொப் பல்மேவின் விடுவிக்கப்படாத கொலை விசாரணை கைவிடப்பட்டுள்ளது.

இந்தக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான ஸ்டிக் எங்ஸ்ட்ரோம் 2000 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இந்த விசாரணை கைவிடப்படுவதாக தலைமை அரச வழக்கறிஞர் கிறிஸ்டர் பீட்டர்சன் நேற்று தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் அவரது கொள்கைகள் தொடர்பில் அதிருப்தியில் இருந்த எங்ஸ்ட்ரோம் சம்பவ இடத்தில் இருந்த நபர்களில் ஒருவராவார். அவர் சிறிது காலம் சந்தேக நபராக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

“அவர் இறந்துவிட்டதால் அவர் மீது என்னால் குற்றம் சுமத்த முடியவில்லை” என்று பீட்டர்சன் செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற கொலையாளி எங்ஸ்ட்ரோம் போன்று இருந்ததாக பல சாட்சியங்களும் கூறுயபோதும் சம்பவ இடத்தில் அவர் இருக்கவில்லை என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

1986 ஆம் ஆண்டு ஸ்டொக்ஹோமில் தனது மனைவியுடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது பின்னால் சுடப்பட்டு ஒலொப் பல்மே கொல்லப்பட்டார்.

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை