Header Ads

ஜீவனா, செந்திலா என்பதல்ல முக்கியம்; இ.தொ.கா வை பலப்படுத்துவதே அவசியம்

ஜனநாயக முறையில் பயணிப்போம் என்கிறார் செந்தில் தொண்டமான்

செந்தில் தொண்டமானா ஜீவன் தொண்டமானா என்பதில்லை முக்கியம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் என்றைக்குமே பிளவுபடாது இருக்க வேண்டும். இது ஒரு குடும்ப சொத்து என்று அனேகர் ஒரு மாயையை வளர்த்து வைத்துள்ளனர். ஜனநாயக முறையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னோக்கிச் செல்லும். ஜீவன் தொண்டமானும் நானும் எவ்விதமான முறுகலிலும் ஈடுபடக்கூடதென்பதில் எப்போதுமே உறுதியாக உள்ளோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  உபதலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜீவன் தொண்டமானும் நானும் எப்போதும் ஒரு பதவிக்கு போட்டி போட மாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செந்தில் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,...

“ஜீவன் தொண்டமானும் நானும் எப்போதும் ஒரு பதவிக்கு போட்டி போட மாட்டோம். அது எமது கொள்கையாகவே உள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு 80 வருடத்திற்கு மேற்பட்ட வரலாறு உள்ளது.80 வருட வரலாற்றில் எத்தனையோ பேரின் உடல் உழைப்பு, உயிரிழப்பு, எவ்வளவோ தியாகங்கள் உள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கட்டியெழுப்புவதில் அனைவரது ஒத்துழைப்புகளும் உள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏனையவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

அந்தவகையில் எதிர்காலத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானும் ஆறுமுகன் தொண்டமானும் எவ்வாறான கொள்கையில் கொண்டு சென்றார்களோ அதே கொள்கையில் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பயணிக்கும் என அவர் கூறியுள்ளார்.

 

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.