யெமனின் ஸ்கொட்ரா தீவு பிரிவினைவாதிகளின் வசம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவு பெற்ற யெமனின் தெற்கு பிரிவினைவாதிகள் அரேபிய கடலில் இருக்கும் அந்நாட்டின் ஸ்கொட்ரா தீவை கைப்பற்றியுள்ளனர். இது நீண்ட காலமாக நீடித்து வரும் யெமன் உள்நாட்டு யுத்தத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

மனிதக் குடியிருப்புகள் இல்லாத அந்த தீவுக்கான ஆளுநரை நீக்கியதாக இடைக்கால சபை பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர். இது ஒரு சதி வேலை என்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற யெமன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

2014 பிற்பகுதியில் தலைநகர் சனாவை ஈரான் ஆதரவு பெற்ற ஹ{த்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்தே யெமனில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது.

ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட சவூதி தலைமையிலான கூட்டணி ஒன்று ஜனாதிபதி அப்த் ரப்பு மன்சூர் ஹதி தலைமையிலான யெமன் அரசுக்கு ஆதரவாக ஹ_த்திக்களுடன் சண்டையிட்டு வருகிறது.

எனினும் ஹ_த்தி எதிர்ப்பு கூட்டணியில் உள்ள தெற்கு பிரிவினையாவதிகள் துறைமுக நகரான அதெனில் கடந்த ஏப்ரல் மாதம் சுயாட்சியை பிரகடனம் செய்தது.

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை