கொழும்பு மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இன்று (04)  முதல் 04 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து இடங்களையும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருடன், பொலிஸார் ஒருவர், கழிவு முகாமைத்துவம் செய்யும் பிரிவின் ஊழியர் ஒருவரும் ஈடுபடுவார்கள் என, கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி மற்றும் சாக்கடைப் புழை (Manhole) ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் வேளையில், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு நகரம் டெங்கு நுளம்பு அற்ற வலயமாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Thu, 06/04/2020 - 11:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை