இராணுவ நடவடிக்கைகளை வட கொரியா இடைநிறுத்தம்

தென் கொரியாவுக்கு எதிரான

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தென் கொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாய் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் மத்திய இராணுவ ஆணையக் கூட்டத்துக்குத் தலைமையேற்ற கிம், திட்டமிட்டிருந்த இராணுவ நடவடிக்கைகளைத் தற்காலிகமாய் நிறுத்தி வைக்க முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.

வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்றவர்கள், கிம்மின் ஆட்சியைக் குறைகூறும் துண்டுப் பிரசுரங்களை வட கொரியாவுக்குள் அனுப்பி வைத்தனர். அது இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்கில் இரு கொரியாக்களும் செய்து கொண்ட உடன்பாட்டை மீறும் செயல் என்று வட கொரியா கூறியது.

இதனைத் தொடர்ந்து அண்மைய வாரங்களில் இரு கொரியாக்களுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. தீர்க்கமான அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும்படி கிம்மின் சகோதரி கிம் யோ ஜொங் இராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து தென் கொரியாவுடனான இணைப்பு அலுவலகத்தையும் வட கொரிய வெடி வைத்து தகர்த்திருந்தது. கொரியப் போர் ஆரம்பித்த 70 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். இந்தப் போர் 1953 ஆம் ஆண்டு போர் நிறுத்தம் ஒன்றுடன் முடிவடைந்தது. எனினும் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கை ஒன்று இதுவரை எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை