வேட்பாளர்களுக்கு ஒழுக்கநெறி, ஊடகங்களுக்கு வழிகாட்டல்

வேட்பாளர்களுக்கு ஒழுக்கநெறி, ஊடகங்களுக்கு வழிகாட்டல்-Code of Conduct-The-Media-Guidelines-Parliament Election

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஒழுக்க நெறிக் கோவையையும், தேர்தல் காலத்தில் ஊடகங்களுக்கான வழிகாட்டல்களையும் தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த ஒழுக்க நெறிக் கோவை மற்றும் வழிகாட்டல்கள் தனித்தனியாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது

தேர்தலுக்கான தேர்தல் வேட்புமனு அறிவித்தல் வெளியிடப்பட்ட தினம் முதல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் காலப்பகுதி வரை இந்த ஒழுக்க நெறிக் கோவை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரினால் பின்பற்றப்பட வேண்டும் என, தேர்தல்கள் செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இக்காலப் பகுதியில் ஒவ்வொரு ஊடக நிறுவனமும், அரசியற் கருமங்கள் தொடர்பான தமது செய்தி மடல்களையம் வேறேதேனும் நிகழ்ச்சியையும் ஒலி, ஒளிபரப்பு செய்வதில் பக்கச்சார்பற்ற சமனிலைத் தன்மையுடனான தகவல்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கான ஒழுக்க நெறி

ஊடகங்களுக்கான வழிகாட்டல்கள்

Sat, 06/06/2020 - 18:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை