டிரம்பின் பிரசாரக் கூட்டத்திற்கு மக்கள் வராதது பற்றி ஆராய்வு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் பெருமளவில் மக்கள் வராததற்கு ஆர்ப்பாட்டக்காரர்களே காரணம் என்று அவரது பிராசாரக் குழு தெரிவித்துள்ளது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு டிரம்ப், ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள துல்ஸா நகரில் முதல் பிரசாரக் கூட்டத்தை நடத்தினார். அதில் 100,000 பேர் பங்கேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19,000 பேர் அமரக்கூடிய அரங்கில், பெருமளவிலான இருக்கைகள் காலியாகக் காணப்பட்டன. அரங்கிற்குள் நுழையமுடியாத பார்வையாளர்களுக்காக, வெளிப்புறத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் பின்னர் ரத்துசெய்யப்பட்டன.

அரங்கிற்குள் பார்வையாளர்கள் நுழையமுடியாதபடி ஆர்ப்பாட்டக்காரர்கள், நுழைவாயிலை முடக்கியதாக டிரம்ப்பின் பிரசாரக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அத்தகவல் பொக்ஸ் நியுஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது.

இருப்பினும், அவ்வாறு பிரச்சினைகள் ஏதும் நேரவில்லை என்று பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டிக்டொக் சமூக ஊடகத்தின் பதின்ம வயதுப் பயனீட்டாளர்கள் சிலர், டிரம்ப்பின் பிரசாரக்கூட்டத்திற்கு பார்வையாளர்கள் வராமல் இருப்பதற்காக, வேண்டுமென்றே அதிக அளவில் நுழைவுச்சீட்டுகளுக்கு முன்பதிவு செய்ததாகக் கடந்த வாரம் சில அறிக்கைகள் வெளியாயின.

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை