தென் சீனாவில் வெள்ளம்: பல டஜன் பேர் உயிரிழப்பு

தெற்கு சீனாவில் வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டிருப்பதோடு பல டஜன் பேர் உயிரிழந்து அல்லது காணாமல்போயிருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுக் காரணமாக கடந்த சில மாதங்களாக பயணக் கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட பிரபல சுற்றுலாத் தலங்கள் இந்த சீரற்ற காலநிலையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் சுமார் 230,000 பேர் வெளியேற்றப்பதாகவும் 1,300க்கும் அதிகமான வீடுகள் அழிந்திருப்பதாகவும் உத்தியோகபூர் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா குறிப்பிட்டுள்ளது.

தெற்கு குவான்சி சுவாங் சுயாட்சி பிராந்தியத்தில் ஏழு பேர் உயிரிழந்து, ஒருவர் காணாமல்போயிருப்பதாக சின்ஹுவா குறிப்பிட்டுள்ளது.

பிரபல சுற்றுலா தலங்களில் வீதிகளில் நீர் நிரம்பி இருக்கும் நிலையில் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் மூங்கில் படகுகளில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

1,000க்கும் அதிகமான ஹோட்டல்கள் வெள்ளத்தில் மூழ்கி, 30க்கும் அதிகமான சுற்றுலாத் தலங்கள் சோதமடைந்திருப்பதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை