நாம் உப உணவு செய்கையில்தன்னிறைவு அடைய முடியும்

மன்னார் அரச அதிபர் மோகன்றாஸ்

மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் உப உணவுச் செய்கையில் தன்னிறைவு அடையக்கூடிய நிலமை ஏற்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் இவ் வருடத்திற்கான சௌபாக்கியா வீட்டுத்தோட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கூறுகையில், மன்னார் மாவட்டத்தில் 14 ஆயிரம் பக்கட் விதைகள் மற்றும் பயிர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் சமூர்த்தி திட்டத்தின் ஊடாக 2 ஆயிரம் பக்கட் விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வீட்டுத்தோட்ட செய்கை ஊடாக ஊக்குவிப்பதோடு உப பயிர்ச் செய்கைக்கான கௌப்பி, பயறு, நிலக்கடலை மற்றும் உழுந்து, எள்ளு போன்ற தானியங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட அளவை விட கூடுதலாக இதுவரை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை விட இன்னும் கூடுதலாக எதிர் பார்க்கப்பட்டுள்ளமையினால் அடுத்து வருகின்ற ஒரு மாதத்தினுள் மிகுதி செய்கை மேற்கொள்ளப்படும்.

வண்டு மற்றும் பூச்சி போன்றவற்றின் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும் பட்சத்தில் பயிர்ச் செய்கை வெற்றியடையக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் உப உணவுச் செய்கை ஊடாக நாங்கள் தன்னிறைவு அடையக்கூடிய நிலமை ஏற்படும். தம்புள்ளை, யாழ்ப்பாணம், முழங்காவில் போன்ற பகுதிகளிலிருந்து உற்பத்திகளை பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.எமது உற்பத்திகளில் ஒரு நிறைவு காணப்படும் பட்சத்தில் உப தானிய செய்கையில் நாங்கள் ஒரு நிறைவை அடைய முடியும்.

குறித்த செய்கையின் முன்னேற்றம் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் அவதானித்து எனக்கு அறியத்தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றார்.

மன்னார் குறூப் நிருபர்

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை