உலகெங்கும் நாளாந்த கொரோனா நோய்த் தொற்று சம்பவங்கள் உச்சம்

கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுற்ற 24 மணி நேரத்தில் உலகெங்கும் 183,000 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தக் காலப் பிரியில் மூன்றில் இரண்டை விடவும் அதிகமாக அமெரிக்காவில் 4,743 பேர் உயிரிழந்திருப்பதோடு பிரேசில் மற்றும் அமெரிக்கா நாடுகளில் முறையே 57,771 மற்றும் 36,617 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி முதல் இரு இடங்களில் உள்ளன. இதற்கு அடுத்து 15,400 வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

சோதனை நடவடிக்கைகள் மற்றும் வைரஸ் பரவலின் அதிகரிப்புக் காரணமாகவே நாளாந்த நோய்த் தொற்றி அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக பிரேசிலில் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் உச்சமடைந்திருப்பதோடு உயிரிழப்பு எண்ணிக்கையிலும் உலகில் அமெரிக்காவுக்கு மாத்திரமே இரண்டாவதாக உள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஒருநாளைக்குள் அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் கடந்த ஜூன் 18 ஆம் திகதி பதிவானது. அந்த நாளில் உலகெங்கும் மொத்தம் 181,232 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகினர்.

நோய்த் தொற்று அரம்பித்தது தொடக்கம் இதுவரை உலகெங்கும் 8.7 மில்லியன் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவும் மொத்தம் 431,715 பேர் உயிரிழந்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை