சீனாவின் பல பகுதிகளில் கனத்த மழை, வெள்ளம்

சீனாவின் பல பகுதிகள் கனத்த மழை மற்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் மேலும் கனத்த மழை தொடரும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்றில் இருந்து வரும் செவ்வாய்க்கிழமை வரை மழை தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

குய்சோ மாநிலத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அன்ஷுன் நகரில் 3 மீற்றருக்கு வெள்ளம் தேங்கியுள்ளது. தேஜுவான் எனும் கிராமத்தில் 10 மீற்றர் உயரத்திற்கு வெள்ளம் தேங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. யுன்னன் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் மூவரைக் காணவில்லை.

சீனாவின் 25க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு பெய்த கனத்த மழையால் ஏற்பட்ட சேதம் மூன்றரை பில்லியன் டொலருக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Sat, 06/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை