கொரோனா சோதனையை குறைக்க டிரம்ப் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சோதனைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், தாம் அவ்வாறு கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

“சோதனை என்பது இருபுறமும் கூர்மையான கத்தி” என்றார் அவர். அமெரிக்காவில் இதுவரை 25 மில்லியன் பேரிடம் வைரஸ் தொற்றுச் சோதனை நடத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வளவு அதிகமான சோதனைகள் நடத்தப்படுகின்றனவோ, அவ்வளவு அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்படுவர் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

கோவிட் –19 நோய்க்குப் பல்வேறு பெயர்கள் இருப்பதாகக் கூறிய அவர், தாம் அதற்கு ‘குங் ப்லுௗ’ எனப் பெயரிடுவதாக கூறினார்.

ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள துல்ஸா நகரில் நடைபெற்ற, முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் இதனைத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் முதலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவானவர்களே கலந்துகொண்டனர்.

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை