இஸ்ரேல் எம்.பிக்கு கொரோனா: பாராளுமன்ற அமர்வு நிறுத்தம்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரேலிய பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஊழியர்களை வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“அரபுக் கூட்டணி எம்.பியான சமி அபூ சஹதாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து கட்டாயம் இல்லையெனில் அனைத்து பாராளுமன்ற பணியாளர்களும் பாராளுமன்றத்திற்கு வர வேண்டாம் என்று அறிவுறுப்பட்டது” என்று இது தொடர்பில் வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாராளுமன்றம் என்று தாம் ஆயிரக்கணக்கானவர்களை சந்தித்ததாக ஜப்பா நகர குடியிருப்பாளரான அபூ சஹதா வானொலியில் தெரிவித்துள்ளார்.

அபூ சஹதாவுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த புதன்கிழமை மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் தாம் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது மில்லியன் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் 17,300க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Fri, 06/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை