பிளொயிட்டின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அமெரிக்காவில் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளொயிட்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹஸ்டனில் நேற்று இடம்பெற்றது.

அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிளொயிட் வளர்ந்த ஹஸ்டன் நகரின் பௌன்டைன் ஒப் பிரைஸ் திருச்சபையில் அவருக்கு நினைவுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதன்போது 6000க்கும் அதிகமானவர்கள் அவருக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தினர்.

ஆபிரிக்க அமெரிக்கரான பிளொயிட் பின்னங்கழுத்தில், பொலிஸ் அதிகாரி டெரேக் சோவின் முழங்காலை வைத்து நீண்டநேரம் அழுத்தியதன் காரணமாக அவர் உயிரிழந்தார்.

பிளொயிட்டின் மரணத்தைக் கண்டித்து அமெரிக்காவிலும் உலகின் பல முக்கிய நகரங்களிலும் இனவாதத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

ஆடவருக்கு மரணத்தை விளைவித்ததற்காக சோவின் கைது செய்யப்பட்டு மூன்று குற்றச்சாடுகளை எதிர்நோக்கியுள்ளார்.

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை