தேர்தல் பிரசாரத்துக்கு எதுவுமில்லாது கூட்டமைப்பு இராணுவம் பற்றி பேசுகிறது

தமிழ் சமூக ஜனநாயக கட்சி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசாரத்திற்கு எதுவுமில்லாமையால் இராணுவம் தொடர்பாக பேசுகின்றார்கள் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும் தமிழ் சமூக ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ப.உதயராசா தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வன்னிப் பெருநிலப்பரப்பை பொறுத்தவரையில் தொடர்ந்தும் மாற்று இனத்தைச் சார்ந்தவர்கள் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அரசாங்கம் சார்பில் ஒரு தமிழ் அமைச்சரை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடாது தனித்து போட்டியிடுகின்றோம்.

பல கட்சிகள் கூறுகின்ற கருத்துக்களைப் பார்க்கின்ற போது வன்னியில் 25, 30 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கினால் தான் எல்லோரும் வெல்ல முடியும். பலர் போட்டியிடுகிறார்கள். தீர்மானிப்பது மக்கள். தேர்தல் எனக்கு புதிதல்ல. கடந்த முறை போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்தேன்.

எம்மோடு எமது கட்சியில் போட்டியிடுபவர்கள் அனைவரும் நல்ல வேட்பாளர்கள். அதனால் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். நாம் பாரிய வாக்கினை பெற முடியும். ஆனால் மற்றவர்கள் போல் எத்தனை ஆசனம் எடுப்போம் என கூற விரும்பவில்லை. எமது கட்சியில் யார் வென்றாலும் ஏற்றுக்கொள்வோம்.

 

வவுனியா விசேட நிருபர்

 

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை