இன்ஸ்டாகிராமில் குழந்தை விற்றவர்கள் ஈரானில் கைது

இன்ஸ்டாகிராம் சமூகதளத்தின் ஊடாக இரு குழந்தைகளை விற்க முயன்ற சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு குழந்தை 20 நாட்களே ஆனது என்பதோடு மற்றைய குழந்தை இரண்டு மாதமானது என்று டெஹ்ரான் நகர பொலிஸ் பிரதானி பிரிகேடியர் ஜெனரல் ஹுஸைன் ரஹிமி தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தைகள் ஏற்கனவே 500 டொலர்கள் வரையான தொகைக்கு வாங்கப்பட்டு 2,000 மற்றும் 2,500 டொலருக்கு இடைப்பட்ட தொகைக்கு மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளன. “வறிய குடும்பங்களிடம் இருந்து குழந்தைகளை பெற்று நல்ல எதிர்காலத்தை வழங்கக் கூடிய குடும்பங்களிடம் வழங்கப்பட்டதாக” ஒரு சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார். இஸ்டாகிராமில் குழந்தைகளை விற்கும் விளம்பரங்கள் பற்றி பொலிஸார் எச்சரிக்கப்பட்டதை அடுத்தே இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹுஸைன் ரஹிமி குறிப்பிட்டார்.

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை