முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு

முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு-Muslim Media Forum AGM Postponed Until Further Notice

நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தை மறு அறிவித்தல் வரை ஒத்தி வைப்பது என மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டம் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் கடந்த மே 31ஆம் திகதி நடைபெற்றது.

நாட்டில் தற்பொழுது காணப்படும் அசாதாணை சூழ்நிலை, கொரோனா தொடர்பிலான சுகாதார நிலைமை மற்றும் பெருமளவிலானோர் ஒன்றுகூட முடியாத நிலை என்பவற்றைக்  கருத்திற் கொண்டே போரத்தின் நிறைவேற்றுக் குழு மேற்படி தீர்மானத்தை ஏகமனதாக மேற்கொண்டுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார்.

போரத்தின் யாப்பின் பிரகாரம் 2020 ஏப்ரல் மாதம் வேட்புமனு கோரப்பட்டு ஜூன் பொதுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றாலும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு பொதுக் கூட்டத்தை நடத்த முடியாமையினால் தற்போதைய நிறைவேற்றுக் குழுவின் பதவிக் காலத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடித்து பொதுக் கூட்டத்தை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Mon, 06/08/2020 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை