நாங்களே உண்மையான ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களே உண்மையான ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப். தெரிவித்தார். 

திருகோணமலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்தேன்.  ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவே ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவும் அனுமதி வழங்கியது. 

இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் என சிறு குழுவினர் கூடி எம்மை கட்சியைவிட்டு நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது.  ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 66 பேரில் 40 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் உள்ளனர். ஆகவே நாம்தான் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஐக்கிய மக்கள் சக்தியில் போடியிடும் நாம் அனைவரும் உண்மையான ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள். டீல் அரசியல் செய்பவர்கள் யாரும் இங்கில்லை. ஆகவே விரைவில் இவ்வளவு காலமும் டீல் அரசியல் செய்த ஐக்கிய தேசிய கட்சியை அழித்தவர்களிடம் இருந்து எமது கட்சியை பாதுகாத்து ஆட்சியையும் கைப்பற்றி உண்மையான ஐக்கிய தேசிய கட்சிகாரர்களாக நாம் சிறிகொத்தவுக்குள்ளும் பாராளுமன்றத்துக்குள்ளும் நுழைவோம் என தெரிவித்தார்.

திருமலைமாவட்ட விசேட நிருபர்  

Mon, 06/01/2020 - 11:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை