பருத்தித்துறை பொதுச் சந்தை மீளத் திறப்பு

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பருத்தித்துறை பொதுச் சந்தை புனரமைப்பு செய்யப்பட்டு மீளத் திறக்கப்பட்டுள்ளது.

சந்தை மூடப்பட்டிருந்த நிலையில் வியாபாரிகள் பொது இடங்களில் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் சந்தை கட்டடமும் திறக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட மரக்கறிச் சந்தையை நகரசபைத் தலைவர் திறந்து வைத்தார். சந்தைக்குள் மரக்கறிகள், பழவகைகள், வெற்றிலை, தேங்காய் போன்ற பொருட்களுக்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட சந்தையை நகரசபைத் தலைவர் யோ .இருதயராஜா பார்வையிட்டு வியாபாரிகளிடம் நிலவரங்களைக் கேட்டறிந்துகொண்டார்.

மீளத் திறக்கப்பட்ட சந்தையில் வியாபாரிகள் மத்தியில் சமூக இடைவெளி பேணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றுநோய் தடுப்பு தொடர்பாக அறிவுறுத்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கரவெட்டி தினகரன் நிருபர்

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை