ஊரடங்கு தளர்வை அடுத்து காற்றின் தரம் குறைவடைவு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்தத ஊரடங்குச் சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, தற்போது கொழும்பில் காற்றின் தரம் தொடர்ந்து குறைவடைந்து வருகின்றது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, காற்றின் தரம் 150 வீதமாக குறைவடைந்துள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்   புவிச்சரிதவியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.

கடந்த காலத்தில்  நிலவிய சுத்தமான காற்றினால், இரத்தினபுரி, கண்டி மாவட்டங்களில் காணப்படும் ஒரு சில மலைகள் கொழும்பில் தென்பட்டன.

ஆனால், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதனாலும், வாகனங்கள் மீண்டும் வீதிகளில் பயணிப்பதாலும்,  அடுத்த சில நாட்களில் காற்றின் தரம் மேலும் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  அத்தோடு, தென்பட்ட மலைக் காட்சிகள் இனிமேல் தென்படாது எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியை ஒப்பிடும்போது, தற்போது கொழும்பில் காற்றின் தரம் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக, சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டினார்.

ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில், கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு காற்றின் தர சுட்டியில் 25 - 30 இடையில் காணப்பட்டது.

Mon, 06/08/2020 - 13:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை