தற்காப்புக் கலைஞர்களை எல்லைக்கு அனுப்பிய சீனா

திபெத்திய பீடபூமியில் நிலைகொண்டிருக்கும் சீனா இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கு 20 தற்காப்புக் கலை பயிற்சியாளர்களை அனுப்பி இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ காரணம் எதுவும் வெளியிடப்படாதபோதும், இம்மாதம் இடம்பெற்ற சீன எல்லைக் காவல் படையினருடனான மோதலில் குறைந்தது 20 இந்திய துருப்புகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1996 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, இந்தியா மற்றும் சீனத் துருப்புகள் எல்லையில் துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களை வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த மோதல்களில் சீனா தமது தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்தியா தரப்பில் மேலும் 76 படையினர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இராணுவத்தின் புதிய தற்காப்புக் கலை பயிற்சியாளர்கள் பற்றிய செய்தி சீனாவின் உத்தியோகபூர்வ செய்திப் பத்திரிகையில் கடந்த ஜூன் 20 ஆம் திகதி வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 15 ஆம் திகதி லடகோனின் கல்வான் நதிப் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இரு அணுசக்தி நாடுகளான சீனா மற்றும் இந்தியா பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.

இதன்போது இரு படையினரும் கைகளாலேயே சண்டையிட்டிருப்பதோடு இவ்வாறான மோதல் ஒன்றில் உயிரிழப்பு நிகழ்வது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 06/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை