ஐ.தே.க தொழிற்சங்கங்களின் சந்திப்பில் பெரும் களேபரம்

ரணிலுக்கு எதிர்ப்பு; ஸ்ரீகொத்தவில் பதற்றம்

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக கட்சியின் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடும் கூட்டத்தின் போது எந்தவித கருத்தும் கூறாது கூட்டத்திலிருந்து கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளியேற  முற்பட்ட போது தொழிற்சங்கத் தலைவர்கள் அவர் மீது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பல தொழிற்சங்க கிளைகளின் தலைவர்கள் தேர்தலின் போது கட்சிக்காக ஒத்தழைக்க போவதில்லை என அறிவித்துள்ளனர்.

தேசிய ஊழியர் சங்கம் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க தலைவர்களுடன் நேற்று (08) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொழிற்சங்க தலைவர்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்க முற்பட்ட போது ரணில் விக்கிரமசிங்க குறித்த இடத்தில் இருந்து வௌியேற முற்பட்டமையால் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் இந்த சந்திப்பு சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கட்சியின் உபதலைவர் ரவி கருணாநாயக்க, பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

பின்னர் தொழிற்சங்க தலைவர்கள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது பிரச்சினைகளை முன்வைக்க முற்பட்ட போது அவர் குறித்த இடத்தில் இருந்து வௌியேற முயற்சித்துள்ள நிலையில் அங்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த பாலித ரங்கே பண்டார முயற்சித்த போது அது பயனளிக்கவில்லை.

கட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க தலைவர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு உள்ளாகினர்.

இதே வேளை ஐக்கிய மக்கள் சக்தியினரே இந்த சந்திப்பை குழப்பியதாக கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

எம். ஏ. எம். நிலாம்

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை