எண்ணெய் உற்பத்திக் குறைப்பு அடுத்த மாத இறுதி வரை நீடிப்பு

ஒபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பும் அதன் கூட்டணி நாடுகளும் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அடுத்த மாதம்வரை நீடித்துள்ளன.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு, அதேபோன்று ரஷ்யா தலைமையிலான ஏனைய ஏற்றுமதி நாடுகளின் எண்ணெய் அமைச்சர்கள் கடந்த சனிக்கிழமை வீடியோ மாநாடு மூலம் பங்கேற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தியைச் சுமார் 10 வீதம் வரை குறைக்க, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒபெக் நாடுகள் இணக்கம் தெரிவித்தன. மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி தினமும் 9.7 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க நாடுகள் ஒப்புக்கொண்டன.

இம்மாத இறுதிவரை நடப்பிலிருக்கத் திட்டமிடப்பட்ட ஒப்பந்தம், தற்போது ஜூலை மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் கொவிட்-19 நிலவரம் காரணமாகப் பல நாடுகளில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருப்பதால் எண்ணெய்க்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளது. விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

Mon, 06/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை