அரசு மூன்றில் இரண்டு பெற ஆதரவு என்பதில் மாற்றமில்லை

ஆனால் தமிழர் அபிலாஷைகள் அவசியம் - சுமந்திரன்

எமது அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களிற்கிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஆட்சியில் இருப்பவர்கள் என்ன மனோநிலையில் இருந்தாலும் அவர்களிடமும் இதைப்பற்றி பேசியிருக்கின்றோம்.

புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

சவால் நிறைந்த காலத்தில் தான் நாம் ஒரு தேர்தலை சந்திக்கின்றோம்.எனவே வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பலத்தை ஒற்றுமையாக காட்ட வேண்டிய தேவை முக்கியமானதாக இருக்கின்றது.

கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை என்பது அப்பட்டமான பொய். பல விடயங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.ஆனால் எதுவும் செய்து முடிக்கப்படாமல் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளதென்பதே உண்மை.

அத்துடன் 19 ஆவது திருத்த சட்டமானது ஒரு முதற்படியாகவே செய்யப்பட்டது. அது நிரந்தரமான சட்டமாக இருப்பது முடியாத விடயம்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் எமது கட்சி ஆதரவாளர்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றோம்.மக்களுடைய பாதுகாப்பிற்கும் சுகாதாரத்திற்கும் எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லாத வண்ணமாக நாம் செயற்படவேண்டும்.

அதனாலேயே தேர்தலையும் பிற்போடுமாறு நாம் கேட்டிருந்தோம். இப்பொழுது இருக்கும் அபாயம் தொடர்பாக நாம் மிகமிக ஆதரவாகவும் பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றோம் என தெரிவித்தார்.

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை