பொருளாதார நெருக்கடி: லெபனானின் பல நகரங்களிலும் இரண்டாவது நாளாக போராட்டம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் லெபனான் எங்கும் பல நகரங்களிலும் இரண்டாவது நாளாக கடந்த சனிக்கிழமையும் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் தொடக்கம் லெபனான் நாணயத்தின் மதிப்பு 70 வீதம் வீழ்ச்சி கண்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நாட்டில் பொருளாதாரம் மேலும் மோசமடைந்துள்ளது.

தலைநகர் பெய்ரூட் மற்றும் வடக்கு நகரான டிரிபோலியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்கள் மற்றும் தீப்பந்தங்கள் கொண்டு தாக்கியதோடு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் ரப்பர் குண்டு தாக்குதலை நடத்தினர்.

1975 முதல் 1990 வரை உள்நாட்டு போரால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் லெபனானில், ஒரு டொலருக்கான மதிப்பு 5 ஆயிரம் லெபனான் பெளண்ட்களாக சரிந்துள்ளது.

 

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை