இந்தியா எதிர்க்கும் நேபாள வரைபடத்திற்கு அங்கீகாரம்

இந்தியாவுடன் சர்ச்சை நிலவும் பகுதிகளை உள்ளடக்கும் நேபாளத்தின் புதிய வரைபடத்துக்கு அந்நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவுடன் பல ஆண்டு காலம் நீடிக்கும் எல்லைப் பூசல் தொடர்பில் நேபாளத்தின் நிலைப்பாடு கடுமையாவதை அது குறிக்கிறது.

இந்திய வெளியுறவு அமைச்சு நேபாளத்தின் புதிய வரைபடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. வரலாற்று அடிப்படையில் ஆதாரமில்லாமல் எல்லைப் பகுதியைச் சேர்த்துக்கொண்டதை அது கண்டித்தது.

உத்தராகண்ட் மாநிலத்தை திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லிப்புலேக் வட்டாரத்துடன் இணைக்கும் சுமார் 80 கிலோமீற்றர் பகுதியை நேபாளம் அதன் வரைபடத்தில் சேர்த்துள்ளது.

எதிர்ப்பு எதுவும் இன்றி புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. மேலவை மாற்றங்களுக்கு இணங்கினால் அது அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறும்.

தலைநகர் காத்மாண்டுவில் புதிய வரைபடத்தைச் வீதிகளில் வரைந்து மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை