நாஜி குறியீடுடனான டிரம்பின் விளம்பரத்தை பேஸ்புக் நீக்கம்

நாஜி ஜெர்மனியில் பயன்படுத்தப்பட்ட குறியீடு ஒன்றைக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார விளம்பரங்களை அகற்றியதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விளம்பரங்களில் கொமியுனிஸ்ட்கள் போன்ற எதிராளிகளை அடையாளப்படுத்த நாஜிக்கள் மூலம் பயன்படுத்தப்பட்ட சிவப்பு முக்கோணத்தை ஒத்த வடிவம் இருப்பதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

எனினும் இதன்மூலம் தீவிர இடதுசாரி செயற்பாட்டுக் குழுவான அன்டிபாவை இலக்கு வைத்ததாக டிரம்பின் பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.

எனினும் திட்டமிட்ட வெறுப்புணர்வை எதிர்க்கும் தமது கொள்கையை இந்த விளம்பரங்கள் மீறுவதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

“சூழல் அல்லது கண்டனத்திற்காக பயன்படுத்துவதன்றி வெறுப்பு அமைப்புகள் அல்லது வெறுப்பு சிந்தனைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடுகளை எம்மால் அனுமதிக்க முடியாது” என்று பேஸ்புக் சமூக ஊடகத்தின் பாதுகாப்பு கொள்கைக்கான தலைவர் நெதனில் கிளெய்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பொலிஸ் பிடியில் வைத்து கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளொயிட் உயிரிழந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற வீதி ஆர்ப்பாட்டங்களில் அன்டிபா அமைப்பே கலவரங்களை ஆரம்பித்ததாக டிரம்ப் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார்.

 

 

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை