அம்பாறை மாவட்ட கழகங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளன அணுசரணையில்

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அணுசரணையில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் COVID 19 - கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கழக வீரர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தின் தலைவர் வை.கே.றஹ்மான் தலைமையில் அண்மையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தில் அங்கம் வகிக்கின்ற சுமார் 31 கழகங்களுக்கும் மாவட்ட மத்தியஸ்தர் சங்கத்திற்கும் என சுமார் 325000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய சமூக சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுத்தீன், சங்கத்தின் செயலாளரும் மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ. அப்துல் மனாப், பொருளாளர் எஸ்.கான் உட்பட முக்கிய அதிதிகள் கலந்து கொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

கழகங்களின் வீரர்களுக்கு இந்த உலர் உணவு பொதிகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்த இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா மற்றும் இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் செயலாளர் ஜஸ்வர் உமர் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தினர் தமது நன்றிகளையும் இதன் போது தெரிவித்தனர்.

பெரியநீலாவணை விசேட நிருபர்

 

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை