முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பங்கேற்ற நிகழ்வுக்கு தடை

சட்டத்தை மதித்து கௌரவமாக வெளியேறினார்

பொலனறுவையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று நடைபெறவிருந்த பொது நிகழ்வொன்று தேர்தல் ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றுள்ள மாணவர்களை பாராட்டும் வைபவம் நேற்றைய தினம் பொலன்னறுவை 'புலதிசி' மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மேற்படி நிகழ்விற்கு வருகை தந்ததன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் அவர் அத்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவை தாம் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி அதனையடுத்து அங்கிருந்து வெளியேறியுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் திணைக்களத்தின் பொலனறுவை அலுவலகத்திலுள்ள சில அதிகாரிகள் அங்கு வருகைதந்து முன்னாள் ஜனாதிபதி வெளியேறும் வரை அங்கிருந்து செல்லாமல் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி வெளியேறிய பின்னரேயே குறித்த அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். (ஸ)

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை