ஐ.நா காருக்குள் பாலியல்: வீடியோ குறித்து விசாரணை

இஸ்ரேலில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான கார் வண்டி ஒன்றுக்குள் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த நிலையில் அது தொடர்பில் ஐ.நா அமைப்பு அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

வெளியாகி இருக்கும் வீடியோவில் ஐ.நா வாகனத்தின் பின்புற இருக்கையில் சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவர் ஆடவரின் மேல் அமர்ந்திருப்பது தெரிகிறது.

டெல் அவிவின் கடற்கரைக்கு அருகில் பிரதான வீதி ஒன்றில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பாக குறிப்பிட்ட ஐ.நா., வீடியோவில் இருப்பவரை அடையாளம் காண்பதை நெருங்கி இருப்பதாகவும் தெரிவித்தது.

இதில் தொடர்புபட்டவர் இஸ்ரேலில் அமைதி காக்கு அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருப்பார் என்று நம்புவதாக ஐ.நா குறிப்பிட்டது. 18 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ அருவருக்கத்தக்கது என்று ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக் தெரிவித்தார்.

Mon, 06/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை