அமெரிக்காவில் வைரஸ் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு

அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்கள் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ள நிலையில், கொவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அலபாமா, புளோரிடா, ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து 3ஆவது நாளாகப் புதிதாக வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை அதிகரித்தது.

இராணுவத்தில் பணியாற்றியபோது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் கூட்டங்கள், வார இறுதியில் நடைபெற்றன. அந்தக் கூட்டங்களில் பலர் கலந்துகொண்டதும், வைரஸ் தொற்று அதிகரிப்புக்கு ஒரு காரணம் என்று நம்பப்படுகிறது.

அந்த 3 மாநிலங்களிலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. சௌத் மற்றொரு மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 77 வீதமான படுக்கைகள் நிரம்பிவிட்டன.

இரண்டாவது அலை வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.

பொதுமக்கள் முகக் கவசம் அணியும்படியும் பெரிய அளவிலான ஒன்றுகூடல்களைத் தவிர்க்கும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை