கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் ஓராண்டாகலாம்

கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க இன்னும் ஓர் ஆண்டு ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியைத் தயாரிக்க ஆராய்ச்சியாளர்களுக்குப் போதிய நேரம் கொடுக்க வேண்டும் என்றும் தற்போதைய நெருக்கடியில் விரைவாகத் தடுப்பூசியைத் தயாரிப்பது சவாலான செயல் என்றும் அது கூறியது. அப்படி விரைவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் அது எல்லாத் தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டது.

கொரோனா வைரஸ்களுக்கு எதிராக இதுவரை எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது உருவாகியுள்ள புதிய கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் முதல் தடுப்பூசியாக அது இருக்கும்.

கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு செயல்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியது.

Sat, 06/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை