இன்று கருணாவை விமர்சிப்பவர்கள் புலிகளுக்கு அன்று ஆயுதங்களை கொடுத்தோர் பற்றி மௌனம்

விசாரணை எனில் சகலவற்றையும் விசாரிக்க வேண்டும் என்கிறார் பிரதமர்

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மான் தெரிவித்த கருத்துக்கு விமர்சனம் தெரிவிப்போர், எல்.ரீ.ரீ.ஈயிற்கு ஆயுதம் மற்றும் நிதி வழங்கியவர் யார் என்பதை கூற தயங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கருணாவின் வரலாற்றை நாட்டு மக்கள் நன்கு அறிவர் என்று கூறிய அவர், சிங்கள மக்களுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகள் பழைய வரலாறு தெரியாதது போன்று பேசுவது கவலைக்குரிய விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து குளியாப்பிடிய பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். ராஜபக்‌ஷவினருக்கு சாப்பாடு கொடுத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட யுகமொன்று காணப்பட்டது. 2015 ஆம் ஆண்டின் பின்னர் சில அரசியல்வாதிகள் இவ்வாறு தான் கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள்.

அரசியல்வாதிகள் சமூகம் குறித்து பரந்த அளவில் சிந்தித்து செயற்பட வேண்டும். உண்மையான தலைவருக்கு எத்தகைய சூழலிலும் தைரியமாக முகங்கொடுக்கும் ஆளுமை இருக்க வேண்டும்.

ஐ.தே.க இரு துண்டாகியுள்ளதை பார்த்தால் மீண்டும் திருத்தியமைக்க முடியாது என்றே தெரிகிறது. சஜித் இருக்கும் வரை அதனை ஒருபோதும் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

(பா)

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை