சீனத் தலைநகரை விட்டு வெளியேற கடும் கட்டுப்பாடு

 வைரஸ் தொற்று அதிகரிப்பு:

சீனத் தலைநகர் பீஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று சம்பங்கள் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள மில்லியன் கணக்கான மக்கள் புதிய முடக்க நிலைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

நகரில் நேற்று மேலும் 31 பேரிடம் நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு இதன்மூலம் கடந்த வாரத்தில் இருந்து மொத்தம் 137 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த அண்மைய அதிகரிப்புக்கு முன்னர் சீனத் தலைநகரில் 57 நாட்களில் உள்நாட்டில் எந்த நோய்த் தொற்று சம்பவமும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் இறைச்சி மற்றும் மரக்கறிகளின் 80 வீத விநியோகத்தை மேற்கொள்ளும் பாரிய சின்பாண்டி உணவுச் சந்தையிலேயே புதிதாக நோய்த் தொற்று ஆரம்பித்துள்ளது.

மிதமான அச்சுறுத்தல் கொண்ட குறைந்து 27 சுற்றுப்புற பகுதிகள் மூடப்பட்டிருப்பதோடு சந்தைக்கு அருகில் இருக்கும் பகுதி ஒன்று அச்சுறுத்தல் கொண்ட பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மிதமான அல்லது உயர் அச்சுறுத்தல் கொண்ட பகுதிகளில் இருப்பவர்கள் நகரை விட்டு வெளியேற முடியாதுள்ளது. குறைந்த அச்சுறுத்தல் கொண்ட பகுதிகளில் இருப்பவர்கள் வெளியேற முடியும் என்றபோதும் சோதனை மூலம் தமக்கு நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நகரில் பாடசாலைகள், நீச்சல் தடாகங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் வீதிகள் திறக்கப்பட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை