இந்தோனேசியாவில் எரிமை சீற்றம்: சாம்பலை கக்கியது

உலகில் மிகவும் உயிரோட்டம் கொண்ட எரிமலைகளில் ஒன்றான இந்தோனேசியாவின் மெராப்பி எரிமலை நேற்று இரு முறை வெடித்து, 6,000 மீற்றர் உயரத்திற்கு வானில் சாம்பலை கக்கியுள்ளது.

ஏழு நிமிடங்கள் வரை நீடித்த இந்த இரு வெடிப்புகளும் நிகழ்ந்ததை அடுத்து மூன்று கிலோமீற்றர் உற்பிரவேசிக்க கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இருந்து விலகி இருக்கும்படி குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பை அடுத்து அச்சுறுத்தல் நிலையை இந்தோனேசிய புவியியல் நிறுவனம் அதிகரிக்காதபோதும், அந்த பகுதியின் ஊடாக வர்த்தக விமானங்கள் அவதானத்துடன் செயற்படும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெராப்பி எரிமலையில் 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெடிப்பில் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததோடு 280,000 பேர் வரை வெளியேற்றப்பட்டனர். எனினும் 1930 ஆம் ஆண்டு நிகழ்ந்த வெடிப்பில் 1,300 பேர் வரை கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை