Header Ads

தெற்குடனான தொடர்பாடலை துண்டிக்கிறது வட கொரியா

தென் கொரியாவுடனான அவசரத் தொடர்பு வசதியைத் துண்டிக்கவிருப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.

தென் கொரியாவுடனான உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக்கொள்வதற்கான முதற்படியாக அது அமையும் என்று கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள், துண்டுப் பிரசுரங்களையும் இதர பொருட்களையும் நாட்டுக்குள் அனுப்பி வருவதாக வட கொரியா குறைகூறி வருகிறது.

அத்தகையோரின் நடவடிக்கைகளைத் தென் கொரியா தடுத்து நிறுத்தாவிட்டால் இரு கொரியாக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை மூடி, இதர திட்டங்களை நிறுத்தப்போவதாக வட கொரியா மிரட்டியது.

அதன் முதற்படியாக, ஒருங்கிணைப்பு அலுவலகத்துடனான தகவல் தொடர்பு, இருதரப்பு இராணுவம், ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையிலான நேரடித் தொலைபேசி வசதிகளை, வட கொரியா துண்டிக்கவுள்ளது.

இரு கொரியாக்களுக்கும் இடையே கடந்த 2018 இல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பதற்றத்தை தணிப்பதற்காக அலுவலகம் ஒன்று நிறுவப்பட்டது.

எனினும் 1953இல் கொரிய யுத்தம் முடிவுற்றபோது அமைதி உடன்படிக்கை ஒன்று எட்டப்படாத நிலையில் இரு நாடுகளும் யுத்த சூழலிலேயே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.