வெற்றி தொடர்பில் அவநம்பிக்கை; சஜித் அணியிலிருந்து பலர் வெளியேறல்

வேட்புமனு செய்த பத்துக்கும் மேற்பட்டோர் அதிருப்தியால் விலகல்

தேர்தல் வெற்றி தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கையால் தேர்தலுக்கு பணம் செலவிடுவதில் பலனில்லை என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள பலர் கட்சியை விட்டு வெளியேறி வருவதாக தெரிய வருகிறது.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் நெருக்கடி நிலைமை தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இவர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் வெற்றி தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கையே விலகலுக்கான காரணமாகும். தேர்தலுக்கு பணம் செலவிடுவதில் பலனில்லை என நினைத்து இவ்வாறு அதிகமானோர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பலர் தலைமைத்துவம் தொடர்பில் மனவருத்தமடைந்து விலகல் முடிவுகளை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் சஜித் தரப்பிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க ஆகியோர் விலகியிருந்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியில் அதிருப்தி அடைந்த குழுவினர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சஜித் தலைமையிலான புதிய கட்சி ஆரம்பித்து தனியாக பிரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை