நியூசிலாந்தில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அதிகாரி பலி

நியூசிலாந்து ஒக்லாந்து நகரில் வழக்கமான போக்குவரத்து தரிப்பிடம் ஒன்றில் பொலிஸார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மற்றுமொரு பொலிஸார் காயமடைந்துள்ளார்.

வாகனத்தில் வந்திருக்கும் துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதோடு அவர் பிடிபட்டாரா என்பது பற்றி விபரம் வெளியாகவில்லை.

எனினும் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்று சுமார் நான்கு மணி நேரத்தின் பின் வீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் இருவரை கைது செய்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூசிலாந்து பொலிஸார் வழக்கமாக துப்பாக்கிகளை வைத்திருப்பதில்லை என்பதோடு, பணியின்போது அதிகாரி ஒருவர் கொல்லப்படுவது மிக அரிதான ஒன்றாக உள்ளது. கடைசியாக 2009 ஆம் ஆண்டே வீடொன்றில் தேடுதலில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸார் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளார்.

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை