ஆபாச நடிகருக்கு எதிராக கற்பழிப்பு குற்றச்சாட்டுகள்

மூன்று பெண்களை கற்பழித்ததாகவும் நான்காமவர் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் ஆபாச நடிகர் ரொன் ஜெரமி மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2014 மற்றும் 2019 காலப் பகுதியில் இந்தப் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 25 மற்றும் 46 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே பாதிக்கப்பட்டவர்களாக கூறப்படுகிறது.

ஆபாச திரை உலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் 67 வயதான ஜெரமி 1970களில் இருந்து 2,000க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

அவர் குற்றங்காணப்பட்டால் 90 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதில் மேற்கு ஹொலிவுட்டில் இருக்கும் வீடு ஒன்றில் வைத்து 25 வயது பெண்ணை கற்பழித்திருப்பதாக லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட வழக்கறிஞர் ஜக்கி லான்சி குறிப்பிட்டுள்ளர்.

குற்றம்சாட்டப்படும் மற்றைய மூன்று சம்பவங்களும் 2017 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் ஒரே லொஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை