உயிரை காப்பாற்ற உதவும் டெக்ஸாமெதாசோன் மருந்து

 கொவிட்- – 19 நோயாளிகளின்:

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற டெக்ஸாமெதாசோன் மருந்து உதவும் என்று பிரிட்டனைச் சேர்ந்த வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உடல்நலத்திற்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத அந்த மருந்து, கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியக் கண்டுபிடிப்பு என்று வல்லுநர்கள் வருணித்துள்ளதாக பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் குணப்படுத்தும் முயற்சியில் தற்போது இருக்கும் பல்வேறு மருந்துகள் சோதிக்கப்படுகின்றன.

நுரையீரல் பாதிப்புக்கு கொடுக்கப்படும் டெக்ஸாமெதாசோன் மருந்து உயிர்வாயுச் சாதனத்தில் இருக்கும் நோயாளிகள் மரணம் அடையும் சாத்தியத்தைச் சுமார் 30 வீதம் குறைப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனில் ஆரம்பத்திலிருந்து அந்த மருந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் 5,000 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறினர்.

நோய்த் தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு அந்த மருந்து வரப் பிரசாதமாக அமையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மருந்து கடுமையான சந்தர்ப்பங்களில் மட்டுமே உதவுகிறது என்றாலும், உலகளவில் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை