சீன அரசாங்கச் சார்புடைய கணக்குகளை நீக்கிய ட்விட்டர்

சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளின் அரசாங்கச் சார்புடைய பல்லாயிரம் கணக்குகள் அகற்றப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

விமர்சகர்கள் மீதான குறைகூறல், சொந்தக் கொள்கைகளைப் பரப்புதல், பொய்த் தகவல்களைப் பரப்புதல் போன்றவற்றுக்கு அந்தக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக நிறுவனம் கூறியது.

அவற்றுள் மிக அதிகமான கணக்குகள் சீன அரசாங்கத்தோடு தொடர்புடையவை.

பெரும்பாலான பதிவுகள் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சாதகமான பதிவுகளை இட்டதாகவும், ஹொங்கொங் அரசியல் நிலவரம் பற்றிப் பொய்யான தகவல்களைப் பரப்பியதாகவும் ட்விட்டர் குறிப்பிட்டது.

உலகளாவிய சீனர்களின் கருத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவை பதிவிடப்பட்டன. சீனக் குடிமக்கள் ட்விட்டரைப் பயன்படுத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிப்பதில்லை.

ஆனால், சர்வதேச அளவில் தவறான தகவல்களைப் பரப்புவதற்கு மட்டும் அது ட்விட்டரைப் பயன்படுத்திக்கொள்வதாக இணையக் குற்றங்களை ஆராயும் நிறுவனமொன்று தெரிவித்தது.

துருக்கியின் கணக்குகள் உள்ளூர் மக்களிடையே அதன் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானுக்கும் அவரது கட்சிக்கும் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டன.

ரஷ்ய அரசாங்கத்தோடு தொடர்புடைய கணக்குகளில் பெரும்பாலும், ஆளுங்கட்சிக்குச் சாதகமான பதிவுகளும் அதன் கொள்கைகளுக்கு எதிரான நபர்களைச் சாடும் பதிவுகளும் இடம்பெற்றதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.

Sat, 06/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை