அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆகஸ்ட்- செப்டம்பரில் நடைபெறும்

நியூயோர்க் ஆளுநர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் நடைபெறுமா? என்ற நிலையில், திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிராணட்ஸ்லம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் தொடர் இரத்து செய்யப்பட்டது. 2-ம் உலகப்போருக்குப்பின் தற்போதுதான் விம்பிள்டன் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் நடைபெறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் போட்டி அமைப்பாளர்கள் திட்டமிட்டபடி போட்டியை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். போட்டியை நடத்துவது குறித்து ஜூன் மாதம் முடிவு செய்வோம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31-ம்திகதியில் இருந்து செப்டம்பர் 13-ம் திகதி வரை நடைபெறும் என நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.

மேலும், போட்டிகளை காண்க இரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதத்திற்குப் பிறகு அமெரிக்காவில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை 400-க்கு கீழ் சரிய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை