இவ்வாண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று

இலங்கையில் இன்று இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரணகத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர் சி கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாழ்.நெடுந்தீவை அண்மித்த பிரதேசங்களில் இன்று காலை 10.30 மணியளவில் சூரிய கிரணகம் தென்படும். ஊர்காவற்துறை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறையிலும் தென்படும். கொழும்பில் காலை 10.29 இற்கு சூரிய கிரகணம் தென்படும் என்பதுடன் மு.ப. 11.51 மணியளவில் கிரகணம் முழுமையடையும். பி.ப 1.29 இற்கு முடிவுறும். கொழும்பிலிருந்து சூரிய கிரகணத்தை அவதானிக்கும் போது சூரியனின் முகத்தை 16.5 சதவீதம் சந்திரனால் மறைக்கப்படுவதை அவதானிக்க முடியும்.

இலங்கை, இத்தாலி, துருக்கி, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டுமே கிரகணம் தெரியும். கிரகணத்தை வெறுங்கண்ணில் அவதானிக்க கூடாதென்பதுடன், 14ஆம் இலக்க வேல்டிங் கண்ணாடி மூலம் அவதானிக்கலாம்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sun, 06/21/2020 - 08:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை