சு.க. அரசுகள் செய்த நன்மைகளை முஸ்லிம்கள் மறந்துவிடக்கூடாது

ஜனாதிபதி தேர்தலின் போது விட்ட தவறை முஸ்லிம் சமூகம் பொதுத் தேர்தலின்போது செய்ய முற்படக் கூடாது. சுதந்திரக் கட்சி அரசாங்கங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு செய்த நன்மைகளை மறந்த நன்றியில்லாதவர்களாக மாறக் கூடாதென முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை ஆதரித்து அக் கட்சியின் வெற்றியில் பங்காளிகளாக முஸ்லிம்களும் மாறவேண்டும். 

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லை என்பதற்காக அவரை தோற்கடிக்க முடிந்ததா? 

அதில் தோற்றுப் போனவர்கள் யார்? முஸ்லிம் சமூகம் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதை சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம். மீண்டும் ஒரு தடவை அந்தத் தவறை செய்யவும் கூடாது.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் உயர்ந்த பதவிகளிலும் மத விழுமியங்களை பேணியும் வாழ முடிந்ததென்றால் அது சுதந்திரக் கட்சி அரசுகளில் தான் என்பதை மறக்கக் கூடாது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிறுபான்மை மக்களின் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் நண்பராகவே இருந்து வந்துள்ளார். முஸ்லிம் நாடுகளை நட்பு நாடுகளாக ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா முஸ்லிம் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

எம். ஏ. எம். நிலாம் 

Mon, 06/08/2020 - 12:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை