லிபியாவில் இராணுவத் தலையீடு: எகிப்து தலைவர் சிசி எச்சரிக்கை

லிபியாவில் துருக்கி ஆதரவுப் படை முன்னேற்றம் கண்டிருக்கும் நிலையில் அங்கு எகிப்து இராணுவம் தலையிடக் கூடும் என்று எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திரிபோலியை மையமாகக் கொண்ட லிபியாவின் ஐ.நா ஆதரவு அரசு எகிப்து ஆதரவு கொண்ட கலீபா ஹப்தர் படையிடம் இருந்து துறைமுக நகரான சிர்த்தை கைப்பற்றியுள்ளது. துருக்கியின் ஆரவுடன் திரிபோலி அரசு லிபியாவில் அண்மைக் காலத்தில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இந்நிலையில் தொலைக்காட்சியில் உரையாற்றிய சிசி, சிர்த் ஒரு சிவப்பு கோடு என்றும் எல்லையை பாதுகாப்பதற்கு லிபியாவில் நேரடித் தலையீட்டை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

“லிபிய மக்கள் தலையிடுவதற்கு எம்மை கோரினால், அது எகிப்து மற்றும் லிபியாவுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் பொது நலனை உலகுக்கு காட்டுவதாக அமையும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

லிபியாவில் நேட்டோ ஆதரவுடன் 2011 இல் இடம்பெற்ற கிளர்ச்சியில் அந்நாட்டின் நீண்டகால தலைவர் முஅம்மர் கடாபி கொல்லப்பட்டது தொடக்கம் அங்கு அரசியல் குழப்பம் நீடிப்பதோடு இரு போட்டி அரசுகள் செயற்பட்டு வருகின்றன.

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை