யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு உதவியமைக்கே கருணாவுக்கு மன்னிப்பு

அட்மிரல் சரத் வீரசேகர

புலிகள் தொடர்பான இரகசிய புலனாய்வு தகவல்களை வழங்கி யுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வர கருணா அம்மானின் பங்களிப்பு பெரும் உதவியதாக அமைந்ததாக கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கருணா புனர்வாழ்வளிக்கப்படாத போதும் அவர் யுத்தத்தை முடிப்பதற்கு அளித்த பங்களிப்பிற்கு நன்றிக் கடனாக அவருக்கு ஜனாநாயக வழியில் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக   ணமாநாட்டில் கருணா தொடர்பில் பதிலளித்த அவர்,

அவர் கூறிய விடயம் தொடர்பில் சி.ஐ.டியில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.தற்போதைய சூழ்நிலையில் ஏன் இவ்வாறான கருத்து கூறினார் என்று ஆராய வேண்டும். இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யுத்தம் நடைபெறுகையில் தான் கருணா எமது பக்கம் வந்தார்.அவர் வழங்கிய தகவல்களின் காரணமாக எதிரிகள் முகாம்கள், களஞ்சியங்கள் அழிக்கப்பட்டன.

யுத்த வெற்றிக்கு அவர் பங்களித்தார்.எதிரியை எமது பக்கம் சேர்த்து எமக்கு சாதகமாக பயன்படுத்தினோம்.

கருணா பற்றி பேசுவோர் 11, 600 பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்தில் இணைத்தது பற்றி பேசுவதில்லை.

இதுவும் தவறா?

தமிழ் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாகவும் இன சுத்திகரிப்பு செய்ததாகவும் சீ.வி. கூறிய போதும் யாரும் பேசவில்லை.

கருணா அம்மான் விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து விலகி இராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினார் இதன் பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது என்றார். (பா)

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை