பாதுகாப்பு செயலாளர் யாழ். விஜயம்; பாதுகாப்பு நிலைமைகள் ஆராய்வு

யாழ். குடாநாட்டிற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் வடக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு படையிரால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை நேற்று முன்தினம் சென்றடைந்த பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவை யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது, யாழ் மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை, கொரோனா வைரஸ் பரவல், போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை தடுத்தல், சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பளிப்பதில் பாதுகாப்பு படையினரின் பங்குகுறித்தான களநிலவரம் தொடர்பாக முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளினால் பாதுகாப்புச் செயலாளருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன் யாழ்ப் ஸாதிக் ஷிஹான்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாப்பினை வலுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பாதுகாப்பு தொடர்பில் பொது மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கிய பாதுகாப்புச் செயலாளர்,வடக்கில் நிலையான அமைதியை பேணும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை