சர்வதேசம் மதிக்கும் மதத் தலைவர் கர்தினால்

ஹரீன் கூற்றுக்கு புத்தசாசன அமைச்சு கண்டனம்

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்த கருத்தை புத்தசாசனம், கலாசாரம் மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு வன்மையாக கண்டிப்பதாக பத்திரிகை அறிக்ைக மூலம் தெரிவித்துள்ளது. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த நாட்டுக்கு ஒரு சொத்து. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளும் போற்றிப் பாராட்டும் ஒரு மதத் தலைவர். அவர் நாட்டின் பெருமையை மேம்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்படும் நாட்டுப்பற்றுக் கொண்ட மதத் தலைவர். அவர் எந்த விதத்திலும் அரசியலில் ஈடுபடவில்லை. எந்நேரத்திலும் நடுநிலையாக செயற்பட்டவர். எனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வரும் ஒரு அமைச்சு என்ற வகையில் புத்தசாசனம், கலாசாரம் மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு ஹரீன் பெர்னாண்டோவின் கூற்றை வன்மையாகக் கண்டிக்கிறது.

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை