9 ஆண்டுகளின் பின் அமெரிக்க மண்ணில் விண்வெளிப் பயணம்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விண்வெளி ஓடம் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர், முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றனர்.

டக் ஹர்லி மற்றும் பொப் பெஹன்கென் ஆகியோர் முதல் முறையாக காப்சூல் வடிவில் வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் பயணித்தது மட்டுமின்றி, அவர்கள் நாசாவுக்கான புதிய வணிக மாதிரியையும் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

தனியார் விண்வெளி நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.

இனி நாசா தனது விண்வெளி வீரர்களை சொந்த விண்கலத்தில், விண்வெளி ஓடத்தில் அனுப்பாது; மாறாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ‘டாக்சி’ சேவையை பயன்படுத்திக்கொள்ளும்.

இந்த வெற்றியின் மூலம், பெரும் செல்வந்தரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை போன்று பல்வேறு தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா நம்பிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஒரு தசாப்த காலமாக ரஷ்ய விண்கலங்களின் உதவியோடே அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 06/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை