கொரோனா தொற்றாளர்கள் 8 மில்லியனைத் தாண்டியது

கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலக அளவில் 8 மில்லியனைக் கடந்துள்ளது.

சீனாவில் ஏழு மாதங்களுக்கு முன் முதல் சம்பவம் அடையாளம் காணப்பட்டது. அதிகாரபூர்வமாகப் பதிவான எண்ணிக்கை, உண்மையான எண்ணிக்கையின் மிகச் சிறுபகுதியாக மட்டுமே இருக்கக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

பல்வேறு நாடுகள் அறிகுறி தென்படுவோரிடமும் மோசமான நிலையில் இருப்பவர்களிடமும் மட்டும் சோதனை நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

உலக அளவில் வைரஸ் பரவலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 435,000ஐக் கடந்துவிட்டது.

மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு சுமார் 2.1 மில்லியன் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலும் ரஷ்யாவும் அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

 

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை